LATEST NEWS
கோட்டையில் கசியும் அரசு ரகசியங்கள்.. திமுகவுக்கு தகவல் சொல்லும் கருப்பு ஆடு யார்..? அதிகாரிகள் செய்யும் தந்திரத்தால் முழிக்கும் முதல்வர் விஜய்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் திமுக ஆதரவு பெற்ற அதிகாரிகள் அதிகளவில் நிரம்பியிருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சந்தேகம் எழுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் புதிய முன்னெடுப்புகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் ரமேஷ் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே, அமைச்சர் சேகர்பாபு எழுந்து அது தொடர்பான முழு விவரங்களையும் சபையில் முன்கூட்டியே போட்டு உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் போவதை அமைச்சர் கே.என்.நேரு முன்கூட்டியே அறிந்து உஷாரானார் என்று ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது, இந்த சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
அரசாங்கத்தின் மிக ரகசியமான கோப்புகளும், துறைகளின் முக்கியத் திட்டங்களும் முன்கூட்டியே கசிவது ஆளுங்கட்சிக்குள்ளும், அரசு நிர்வாகத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறை மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மூலமாகவே இந்தத் தகவல்கள் கசிவதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது மற்றும் தகவல் கசிவைத் தடுப்பது என்று தெரியாமல் தமிழக முதல்வர் முழிக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசு இயந்திரத்தில் உள்ள இத்தகைய உள்விவகாரங்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் தற்போதைய அரசியல் சூழலில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
