L9 டூ L1…! ஜாய் ஆலுக்காஸ் விலையை அப்படியே அச்சு அசலாக ஏற்ற கல்யாண் ஜூவல்லர்ஸ்..தாய்மாமன் தங்கமோதிரம் திட்ட டெண்டர் போட்டியில் அரங்கேறிய விசித்திர விவாதம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

L9 டூ L1…! ஜாய் ஆலுக்காஸ் விலையை அப்படியே அச்சு அசலாக ஏற்ற கல்யாண் ஜூவல்லர்ஸ்..தாய்மாமன் தங்கமோதிரம் திட்ட டெண்டர் போட்டியில் அரங்கேறிய விசித்திர விவாதம்..!!

Published

on

‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஒரு விசித்திரமான நிகழ்வு தற்போது இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்ற 11 முன்னணி நகை நிறுவனங்களில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் வெறும் 0.01 ரூபாய் (1 பைசா) என்ற மிகக் குறைந்த விலைப்புள்ளியைக் கோரி முதலிடத்தைப் (L1) பிடித்துள்ளது. இந்த வியக்கத்தக்க ஏலத் தொகை எப்படி சாத்தியம் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த விவாதத்திற்கு மிக முக்கியக் காரணம், மற்றொரு முன்னணி நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ் முதலில் சமர்ப்பித்த விலைப்புள்ளிதான். அந்த நிறுவனம் இந்த டெண்டருக்கு ரூ. 978.50 என விலைப்புள்ளி கோரி 9-வது இடத்தில் (L9) இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் அது முதலிடத்தில் இருந்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் 1 பைசா என்ற மிகக் குறைந்த விலையை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement

டெண்டர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஜிஆர்டி (GRT), விபிஜே (VBJ), டைட்டன் (Titan), மலபார் கோல்டு உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ரூ. 410 முதல் ரூ. 15,000 வரை விலைப்புள்ளி கோரியிருந்தன. இவற்றுக்கு மத்தியில், L9-ல் இருந்த கல்யாண் ஜூவல்லர்ஸ், L1-ன் விலையை அப்படியே ஏற்றுக் கொண்டது எப்படி என்ற மர்மம் குறித்து நெட்டிசன்கள் பலவாறாக விவாதித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in