அடப்பாவமே..! லைக்ஸ்காக இவ்வளவு பெரிய பேராபத்தா…? ராமகங்கா பாலத்தில் அரங்கேறிய நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரக் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவமே..! லைக்ஸ்காக இவ்வளவு பெரிய பேராபத்தா…? ராமகங்கா பாலத்தில் அரங்கேறிய நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரக் காட்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஜாமா மஸ்ஜித் ராமகங்கா பாலத்தில் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுப்பதற்காகவும் சாகசங்கள் செய்வதற்காகவும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பொங்கி வழியும் ஆற்றில் குதிக்கும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலத்தின் மீது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு வாலிபர் ராமகங்கா ஆற்றின் கடும் நீரோட்டத்தில் குதித்துள்ளார். ஆழமான நீரிலும் வேகமான நீரோட்டத்திலும் அவரால் நீந்த முடியாமல் தத்தளித்து, மரணத்தின் விளிம்பிற்குச் சென்று தன் நம்பிக்கையை இழந்து நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார்.

இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்குவதைக் கண்ட பாலத்தில் இருந்த மக்கள் பயத்தில் அலறியடித்துள்ளனர். அப்போது, அங்கிருந்த சப்பு மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த உள்ளூர் வீரமிக்க டைவர்ஸ் துளியும் தாமதிக்காமல் கொந்தளிக்கும் ஆற்றில் குதித்தனர். கடுமையான நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல், ஆற்றின் ஓட்டத்தால் சுமார் 50 அடிகள் வரை இழுத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞரைத் துரத்திச் சென்று, பப்பு வெல்டரின் மேடு பகுதிக்கு அருகே அவரைப் பத்திரமாக மீட்டு உயிருடன் கரைக்குக் கொண்டு வந்தனர்.

Advertisement

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், தான் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தன் சகோதரன் அழைப்பதாக ஏற்பட்ட மனப்பிரமையால் ஆற்றில் குதித்ததாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இருப்பினும், காவல்துறையின் கண்முன்னேயே தினமும் பல இளைஞர்கள் இதுபோன்று ராமகங்கா பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்குள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலத்தின் மீது நிரந்தரப் காவல் சாவடி அமைத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in