பதவி போனா என்ன..? ‘வாரிசுக்கு பதவி கொடுங்க’..! திமுக தலைமையைக் கலங்கடிக்கும் சீனியர்களின் புது சிக்கல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பதவி போனா என்ன..? ‘வாரிசுக்கு பதவி கொடுங்க’..! திமுக தலைமையைக் கலங்கடிக்கும் சீனியர்களின் புது சிக்கல்..!!

Published

on

திமுகவில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்களால் பதவியை இழக்கும் நிலையில் உள்ள மூத்த நிர்வாகிகள், தங்களது வாரிசுகளுக்கு கட்சிப் பதவிகளைப் பெற்றுத்தர காய்களை நகர்த்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்கள் தங்களது பதவிகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. தலைமை எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்துள்ள அவர்கள், கட்சியின் இந்த நடவடிக்கையை அமைதியாக எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேவேளையில், கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக நேரிடும் மூத்த நிர்வாகிகள், தங்களுடைய வாரிசுகளுக்குப் பதவி வழங்க வேண்டும் என்று தலைமைக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், வாரிசுகளுக்குப் பதவி கோரும் மூத்த நிர்வாகிகளின் இந்த எதிர்பார்ப்பை திமுக தலைமை ஏற்றுக்கொள்ளுமா அல்லது புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in