“ஐயோ என் கண்ணே போயிடுச்சு..!” தவறை தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. அபாச்சி பைக் சாவியை ஆயுதமாக மாற்றிய சைக்கோ வாலிபர்.. பெட்ரோல் பல்க்கில் நடந்த நள்ளிரவு இரத்தக் களரி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ என் கண்ணே போயிடுச்சு..!” தவறை தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. அபாச்சி பைக் சாவியை ஆயுதமாக மாற்றிய சைக்கோ வாலிபர்.. பெட்ரோல் பல்க்கில் நடந்த நள்ளிரவு இரத்தக் களரி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், வரிசையை மீறி வாகனத்தை நிறுத்த முயன்றதை தட்டிக்கேட்ட இளைஞர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்னான் என்ற இளைஞர் பெட்ரோல் போடுவதற்காகத் தனது பைக்கில் வரிசையில் நின்றுகொண்டிருந்த போது, அபாச்சி பைக்கில் வந்த ஒரு நபர், வண்டியை திடீரென குறுக்கே நுழைத்து அட்னானை இடித்துள்ளார். இதனை அட்னான் நாகரீகமாகத் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது பைக் சாவியை எடுத்து அட்னானின் முகம் மற்றும் கண்ணில் குத்தி கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்தக் கலவரத்தின் போது, தாக்குதல் நடத்திய நபருடன் வந்த பெண், சண்டையை விலக்காமல் அட்னானின் கழுத்தைப் பிடித்து நகங்களால் முகத்தைக் கீறி காயப்படுத்தியுள்ளார். மேலும், அந்தப் பெண் அட்னானை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டியும் உள்ளார். இந்தத் துயரச் சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மஜோலா காவல் நிலையப் போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபர்களையும் அந்தப் பெண்ணையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in