LATEST NEWS
“திமுகதான் ஜெயிக்கும்னு சொல்ல 15 லட்சம் பேக்கேஜ் பேசினாங்க” அந்த புள்ளி யார் தெரியுமா..? கரூர் கம்பெனியின் ரகசிய பேரத்தை அம்பலப்படுத்திய தவெக எம்.எல்.ஏ கனிமொழி..!!
தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது கோவை கவுண்டம்பாளையம் தொகுதி TVK எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷின் அடுத்தடுத்த அதிரடிப் பேச்சுகள்தான். கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு முன்பாக, ஆளுங்கட்சியான திமுகவின் முக்கியப் புள்ளிகளிடம் இருந்து தனக்கு வந்த ரகசிய போன் கால்கள் மற்றும் பேரங்கள் குறித்துப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது உரையின் போது குறிப்பிட்ட கனிமொழி, “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகதான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நீங்கள் ஜோசியம் கூற வேண்டும்; அதற்குப் பதிலாக 15 லட்ச ரூபாய் பேக்கேஜ் தருகிறோம்” எனத் தன்னிடம் ‘கரூர் கம்பெனி’ தரப்பில் இருந்து போனில் பேரம் பேசப்பட்டதாக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிரபல ஜோதிடரான தன்னைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த திமுக தரப்பு முயன்றதாகவும், ஆனால் தான் அந்தப் பெரும் தொகையை நிராகரித்துவிட்டு மக்கள் நலனுக்காக நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்ததாகவும் அவர் மேடையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினின் சட்டமன்றப் பேச்சுக்குக் கவுண்ட்டர் கொடுத்த கனிமொழி, உதயநிதி வீட்டிலிருந்தே தனக்கு அரசியல் கணிப்புகள் கேட்டு வந்த போன் கால்களின் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ‘கரூர் கம்பெனி’ தன்னிடம் பேசிய பேரத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக எம்.எல்.ஏ-வின் இந்தத் தொடர் குற்றச்சாட்டுகள் திமுகவிற்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
