LATEST NEWS
CM விஜய் சும்ம விடமாட்டார்… Fine போடுவார்.. கைதும் செய்வார்.. கனிம வளத்தைக் கொள்ளையடிச்சு மெடிக்கல் காலேஜ் நடத்துபவர்களுக்குச் சட்டசபையிலேயே மரண பயம் காட்டிய ஆதவ் அர்ஜுனா..!!
“பினாமி மூலம் கனிம வளத்தைக் கொள்ளையடித்து மருத்துவக் கல்லூரிகள் நடத்துபவர்கள் மீது முதலமைச்சர் கூடிய விரைவில் Fine போடுவார், கைதும் செய்வார்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் மிகவும் அதிரடியாக முழங்கியுள்ளார். கனிம வளத்தை த.வெ.க.வினர் யாரும் ஒருபோதும் கொள்ளையடிக்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தவெக அரசு தப்பவிடாது என்று எச்சரித்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில் சுட்டிக்காட்டினார். பினாமி பெயர்களில் இயற்கை அன்னையைக் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்த திமிங்கலங்களைக் கூண்டோடு சிறையில் அடைப்பதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் பேசியது, சட்டப்பேரவை வளாகத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே மிகப்பெரிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
