“மனுஷன் நாயை அடித்தால் நடிகை த்ரிஷா வர்றாங்க” புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக MLA அதிரடி பேச்சு… பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மனுஷன் நாயை அடித்தால் நடிகை த்ரிஷா வர்றாங்க” புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக MLA அதிரடி பேச்சு… பெரும் பரபரப்பு..!!

Published

on

மனிதன் நாயை அடித்தால் நடிகை த்ரிஷா உடனே கேள்வி கேட்க வந்துவிடுவதாக புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த, அவற்றுக்குக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விலங்கு நல ஆர்வலரான த்ரிஷாவைச் சுட்டிக்காட்டிப் பேசிய இவரது கருத்துக்கள், தற்பொழுது அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

பொதுவெளியில் அரசியல் காரணங்களுக்காக திமுகவினர் தொடர்ந்து த்ரிஷாவின் பெயரைப் பயன்படுத்தி வரும் நிலையில், சட்டப்பேரவைக்குள்ளேயே அவரது பெயர் ஒலிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்ற நோக்கில் இந்த விவாதம் எழுப்பப்பட்டாலும், ஒரு பெண் நடிகரைக் குறிவைத்து இவ்வாறு பேசுவது தேவையற்றது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் சினிமா தரப்பில் இருந்து இதற்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in