LATEST NEWS
“திக் திக் திக் நிமிடங்கள்..! வானில் வெடித்த விமானம்.. ராக்கெட் வேகத்தில் விரிந்த பாராசூட்..!” 29 வயது ஓட்டுநர் நேர்ந்த மரண பயங்கரம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பிரேசிலின் பம்புல்ஹா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில், விமானத்தின் உள்ளே திடீரென ஏற்பட்ட மெகா வெடிப்பு காரணமாகத் தீப்பிடித்த சூழலில், 29 வயது இளம் ஓட்டுநர் CAPS என்ற அதிநவீனத் தொழில்நுட்பத்தின் உதவியால் மயிர்இழையில் உயிர் பிழைத்த அதிரடிச் சம்பவம் சர்வதேச அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப் பராமரிப்புப் பணிக்கான சோதனை ஓட்டத்திற்காக அந்த இளம் ஓட்டுநர் மட்டும் தனியாக விமானத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. விமானம் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழும்ஆபத்தான சூழலில், அந்த ஓட்டுநர் சற்றும் பதற்றமடையாமல் தனது சாதுரியத்தால் விமானத்தில் இருந்த அவசரக்கால CAPS கயிற்றை அதிரடியாக இழுத்துள்ளார்.
Brazil के पम्पुलहा हवाई अड्डे से उड़ान भरने के लगभग 15 मिनट बाद एक हवाई जहाज के भीतर धमाका हुआ और आग लग गई.
विमान को एक 29 वर्षीय पायलट उड़ा रहा था. एक मेंटेनेंस यात्रा के लिए पायलट ने अकेले ही उड़ान भरी थी.
प्लेन क्रैश होने की स्थिति में था लेकिन पायलट ने घबराने की बजाय विमान… pic.twitter.com/NNXc1PJxGO— Ruby Arun रूबी अरुण (@arunruby08) August 25, 2026
இந்த அதிநவீன அமைப்பானது, ஒரு சிறிய ராக்கெட்டின் உதவியோடு விமானத்தின் கூரைப்பகுதியிலிருந்து ஒட்டுமொத்த விமானத்திற்குமான ஒரு பிரம்மாண்ட பாராசூட்டை அடுத்த நொடியே வெளிப்படுத்தியது. இதன் காரணமாக, விமானம் அசுர வேகத்தில் செங்குத்தாகக் கீழே விழுந்து நொறுங்குவதற்குப் பதிலாக, பாராசூட்டின் பலத்தால் மிகவும் மெதுவாகவும், கட்டுப்பாடான வேகத்திலும் தரை நோக்கி இறங்கத் தொடங்கியது. தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களில் விமானம் முற்றிலும் எரிந்து சாம்பலான போதிலும், பாராசூட் கொடுத்த மெதுவான தரையிறக்கத்தின் காரணமாக விமானத்தின் முக்கியக் கேபின் பகுதி துளியும் சேதமடையாமல் தப்பியது; இதனால் அந்த இளம் ஓட்டுநர் வெறும் சிறு காயங்களுடன் அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பினார்.
