“காட்டுங்க ரிங்கு பையா…” எங்கிருந்து வருது இந்த பவர்..? பவுண்டரி எல்லையில் ரசிகர் கேட்ட கேள்வி… சற்றும் யோசிக்காமல் சட்டையை கழற்றி அக்மார்க் “லோக்கல் பாய்” ஆக மாறிய இந்திய ஸ்டார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காட்டுங்க ரிங்கு பையா…” எங்கிருந்து வருது இந்த பவர்..? பவுண்டரி எல்லையில் ரசிகர் கேட்ட கேள்வி… சற்றும் யோசிக்காமல் சட்டையை கழற்றி அக்மார்க் “லோக்கல் பாய்” ஆக மாறிய இந்திய ஸ்டார்..!!

Published

on

உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் மீரட் மேவரிக்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரமுமான ரிங்கு சிங் ரசிகர் ஒருவருடன் மைதானத்தில் செய்த சுவாரசியமான உரையாடல் தற்பொழுது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது. லக்னோ ஏகானா மைதானத்தில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போது, பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ரிங்கு சிங்கிடம் கேலரியில் இருந்த ரசிகர் ஒருவர், “ரிங்கு பையா! இவ்வளவு நீளமான சிக்ஸர்களை அடிக்கிறீர்களே, இதற்கான பவர் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது?” என்று உரக்கக் கேள்வி எழுப்பினார்.

அந்த ரசிகர் அத்துடன் நிறுத்தாமல், ரிங்கு சிங்கிடம் அவரது கைகளின் பைசெப்ஸ் தசையைக் காட்டுமாறும் விநோதமான கோரிக்கை ஒன்றை வைத்தார். ரசிகரின் இந்த அன்பான வேண்டுகோளைக் கேட்டுப் புன்னகைத்த ரிங்கு சிங், சற்றும் யோசிக்காமல் தனது சட்டைக் கையை மேலே சுருட்டி, தனது பலமான பைசெப்ஸ் தசையை ரசிகர்களுக்குக் காட்டினார். இதைப் பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து பலத்த சத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement

மழை காரணமாக 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த விறுவிறுப்பான போட்டியில், ரிங்கு சிங் வெறும் 10 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இவரது இந்த மிரட்டலான பேட்டிங்கின் உதவியோடு மீரட் மேவரிக்ஸ் அணி 5 ஓவர்களில் 96 ரன்கள் குவித்து, கான்பூர் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ரிங்கு சிங்கின் இந்த அதிரடி ஆட்டமும், ரசிகர்களுடனான அவரது எளிமையான அணுகுமுறையும் தற்பொழுது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in