LATEST NEWS
“மக்களுக்கு ஷாக் நியூஸ்..! நகைக்கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லையா..?” பொருளாதார வல்லுநர்கள் சொன்ன அதிர்ச்சி உண்மை..!!
தமிழக அரசின் தங்க மோதிரம் திட்டம், ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் மகளிருக்கு இலவச பேருந்து பயண விரிவாக்கம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் காரணமாகத் தற்போது கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில், வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது என்பது அரசுக்குச் சாத்தியமில்லாத ஒன்று எனப் பொருளாதார வல்லுநர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த கூடுதல் நிதிச் சுமைகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கலாம் என்ற கவலையையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
அதேநேரம், தற்போது உலக சந்தையில் ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது நகைகளின் மீது பெறும் கடன்தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. தங்கம் விலை உயர்வால் நகைக்கடன்களுக்கான மதிப்பு கூடி, மக்கள் கூடுதல் பணத்தை கடனாகப் பெற முடிவது தற்காலிக நிவாரணமாக இருந்தாலும், இது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் பொறுப்புகளையும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், நகைக்கடன் தள்ளுபடி குறித்த விவாதங்கள் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன
