“CM விஜய்யும் ஜெயிலுக்கு செல்வார்… முதல்வருக்கு வாய்க்கொழுப்பு அதிகம்…!” ரகசிய ஃபைல் சவாலால் ஆவேசத்தின் உச்சத்திற்கே சென்று ஆர்.எஸ். பாரதி விட்ட ஓபன் வார்னிங்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“CM விஜய்யும் ஜெயிலுக்கு செல்வார்… முதல்வருக்கு வாய்க்கொழுப்பு அதிகம்…!” ரகசிய ஃபைல் சவாலால் ஆவேசத்தின் உச்சத்திற்கே சென்று ஆர்.எஸ். பாரதி விட்ட ஓபன் வார்னிங்..!!

Published

on

தமிழக வெற்றி பெற்ற கழக தலைவர் விஜய் விரைவில் சிறைக்கு செல்வார் என்ற தொனியில் திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தன்னிடம் திமுக குறித்த 3 ரகசிய கோப்புகள் இருப்பதாகவும், விரைவில் அவற்றை வெளியிடப் போவதாகவும் விஜய் கூறி வருவதற்கு காட்டமாக பதில் அளித்தார். தமிழக முதல்வரை விமர்சிக்கும் வகையில் விஜய் பேசி வருவது அவருடைய வாய்க்கொழுப்பையே காட்டுகிறது என்று அவர் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய் ஃபைல்களை அவிழ்த்தால் தானும் பதிலுக்கு பல விஷயங்களை அவிழ்க்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இதேபோல டான்சி நிலத்தை வாங்கியதாக வாய்க்கொழுப்பாக பேசிய காரணத்தினால்தான் சிறைக்குச் செல்ல நேரிட்டது என்பதை நினைவூட்டிய ஆர்.எஸ்.பாரதி, விஜய்க்கும் அதேபோன்ற நிலைமைதான் ஏற்படும் என்ற தொனியில் பேசியது தவெக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in