LATEST NEWS
“உள்நாட்டு சண்டையை நிறுத்துங்க..!” உண்மையான எதிரியை நோக்கி ஆயுதம் தூக்கச் சொன்ன ஈரான்… வளைகுடா தலைவர்களுக்குப் பறந்த அவசர அறிக்கை.. மத்திய கிழக்கில் பரபரக்கும் புதிய அரசியல் ட்விஸ்ட்..!!!
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வளைகுடா நாட்டுத் தலைவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், முஸ்லிம் நாடுகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, உண்மையான எதிரியைத் துல்லியமாகக் கண்டறிந்து அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு இடையே நிலவும் சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரிவினைகள் அனைத்தும், இஸ்லாமிய நாடுகளின் பலவீனத்தையே காட்டுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ள அவர், முஸ்லிம்களுக்கு இடையேயான இந்த உள்நாட்டு வேறுபாடுகள் அனைத்தும் எதிரி நாடுகளுக்குச் சாதகமாக அமைந்துவிடுவதாக எச்சரித்துள்ளார். இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாத பட்சத்தில், இந்த வல்லரசு நாடுகள் தங்களது சுயலாபத்திற்காக முஸ்லிம் நாடுகளின் வளங்களைச் சுரண்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு வட்டாரத்தில் ஈரானின் உச்ச தலைவரின் இந்தக் கடிதம் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது
