CRIME
திக் திக் நிமிடங்கள்… பற்றி எரிந்த தீ… பதறி அடித்து அணைத்த ஊழியர்கள்..!மணிப்பூர் பெட்ரோல் பங்க் மீது வீசப்பட்ட கையெறி குண்டு..! தப்பிய நபரைத் தீவிரமாகத் தேடும் போலீசார்..!!
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தொபால் மாவட்டம், கான்கொபாக் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்த பெட்ரோல் பங்கிற்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென பங்க் மீது கையெறி குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், கையெறி குண்டு வீசப்பட்ட இடத்தில் உடனடியாகப் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் தரப்பில் இருந்து உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கையெறி குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளையில், இந்த கையெறி குண்டு வீச்சுச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதக் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
