Uncategorized
“ஐயோ கடவுளே..! ரம்பத்தால் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!” கள்ளக்காதலியைக் கொல்ல கணவனுடன் கைகோர்த்த மனைவி.. கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் அரங்கேறிய கொடூர கொலை.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஒரே வீட்டில் தங்குமாறு மிரட்டிய கள்ளக்காதலியை, கணவனும் மனைவியும் இணைந்து சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் விபரீதச் சம்பவம் சென்னை கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் அம்பலமாகியுள்ளது. கொலையுண்ட பெண்ணிற்கு ஏற்கனவே இருமுறை திருமணமாகிப் பிரிந்த நிலையில், கூடுவாஞ்சேரியில் தனது 19 வயது மகனுடன் தங்கிப் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அசாமைச் சேர்ந்த ராகுல் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் ஹயாத் நிஷா கர்ப்பமடைந்துள்ளார். இதனால் அவர் ராகுலைத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி மிரட்டியதோடு, ராகுல் மற்றும் அவரது மனைவி பகவதி மாஜியுடன் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கூறியுள்ளார். தங்களது குடும்ப வாழ்க்கை முற்றிலும் சீரழிந்துவிடும் என்று அஞ்சிய ராகுலும், அவரது மனைவி பகவதி மாஜியும் இணைந்து, கடந்த மாதம் 3-ஆம் தேதி ஹயாத் நிஷாவின் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துச் சத்தமில்லாமல் கொடூரக் கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொலையை மறைப்பதற்காக, கொலையாளிகள் சடலத்தை அடையாளம் தெரியாதவாறு மாற்றி, ஒரு சூட்கேசில் அடைத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் ஆக்ராவுக்கு அனுப்பிவிட்டுத் தப்பியோடினர். ஆக்ராவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்தத் துப்புத்துலக்கல் விசாரணையின் முடிவில், பதுங்கியிருந்த கொலையாளிகளான ராகுல் மற்றும் பகவதி மாஜியை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
