Uncategorized
கோயிலில் போன் கொண்டு செல்ல ரூ.5 வசூலிப்பது ஏன்..? கிளம்பிய சர்ச்சைக்கு அமைச்சர் கொடுத்த நச்சுனு விளக்கம்..!!
கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையில் கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இத்தகைய சிறப்புப் பிரிவினர் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்வதைத் தடுக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளைக் கருதி இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக வசூலிக்கப்படும் ரூ.5 கட்டணம் குறித்து தவறான விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டணம் மூலம் பெறப்படும் நிதி, செல்போன் பாதுகாப்பு அறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பளமாகவும், கோயில்களில் வழங்கப்படும் அன்னதானத் திட்டத்திற்காகவும் மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
