LATEST NEWS
“கறிக்கடையில் கூட இந்த அளவுக்கு வெட்ட மாட்டார்கள்…” 10 ஆணவக் கொலைகள்… அதை ‘காதல் மரணம்’னு கவர் பண்றாங்களா…?! சட்டப்பேரவையில் உதயநிதி ஆவேசப் பேச்சு..!!!
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து காணப்படுவதாகவும், கறிக்கடையில் கூட இந்த அளவுக்கு வெட்ட மாட்டார்கள் என்ற அளவிற்கு மாநிலத்தில் வெட்டுக் குத்து சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் உதயநிதி கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், தற்போதைய ஆட்சி மற்றும் மாநிலத்தின் பாதுகாப்புச் சூழல் குறித்தும் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேலும், தவெக ஆட்சி அமைந்த பிறகு 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகவும், ஆனால் அத்தகைய கொடூரமான சம்பவங்களைக் காதல் மரணங்கள் என்று ஊடகங்களில் வெளிப்படுத்துவது வழக்கமாக இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து இருப்பதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டி விவாதித்துள்ளார்.
