LATEST NEWS
“ஆத்தாடி… என்னடா இது… இப்படி ஒரு ராட்சஷக் கூட்டமா..?” மரத்தின் மேல் தெரிந்த ‘அந்த’ உருவம்… உண்மை தெரிந்ததும் உறைந்துபோன பெண்..! இணையத்தை கலக்கும் ஷாக்கிங் வீடியோ..!!
ஹைதராபாத்தில் மரங்களுக்கு மேலே ஆயிரக்கணக்கான கொசுக்கள் ஒன்றாகப் பறந்து கொண்டிருப்பதை ஒரு பெண் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். மாலை வேளையில் மரங்களின் மேல் கருமையாகவும் அடர்த்தியாகவும் அசையும் ஒரு கூட்டத்தைப் பார்த்த போது, முதன்முதலில் அங்கே ஏதோ தீப்பிடித்துப் புகை எழும்புவது போலத் தோன்றியது. ஆனால், அந்தப் பெண் கேமராவை ஜூம் செய்து பார்த்த போதுதான் அங்கு நடந்தது என்ன என்ற உண்மை தெரியவந்தது.
மோனிகா என்ற பெண் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் முதலில் இதை மரங்களுக்குப் பின்னால் எழுந்த தீ அல்லது புகை என்று நினைத்து சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கவனித்துள்ளார். பின்னர் இது தீ அல்ல என்பதை உணர்ந்து கேமராவைச் சற்று ஜூம் செய்து பார்த்தபோது, ஆயிரக்கணக்கான கொசுக்கள் ஒன்றாகச் சுற்றிச் சுழன்று பறப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். “நண்பர்களே, இது கொசுக்கள் தான், என் வாழ்க்கையில் முதல்முறையாக இப்படிப் பார்க்கிறேன்” என்று அவர் அந்த வீடியோவில் ஆச்சரியத்துடன் கூறுகிறார்.
https://www.instagram.com/reel/Dcv00G0oafL/?utm_source=ig_web_button_share_sheet
அந்த கொசுக்களின் கூட்டம் வானத்தில் அலை அலையாகச் சுற்றிச் சுழன்ற விதத்தைப் பார்த்த மோனிகா, அதை பாம்பின் ‘நாகினி டான்ஸ்’ நடனத்துடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். மேலும், “ஹைதராபாத்தில் கொசுக்களின் தொல்லை தொடங்கிவிட்டது” என்ற தலைப்புடன் அவர் பகிர்ந்த இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், மாலை நேர வானத்தில் புகை போலச் சுழன்று பறந்த இந்த வித்தியாசமான மற்றும் அபூர்வமான காட்சியைப் பார்த்து வியந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
