“என் சின்னப் பிள்ளை நான் இல்லாம தூங்காது சார்…” -3 மகள்களை விபத்தில் பறிகொடுத்துக் கதறி அழுத தந்தை… நாமக்கல்லை உலுக்கிய பெருஞ்சோகம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் சின்னப் பிள்ளை நான் இல்லாம தூங்காது சார்…” -3 மகள்களை விபத்தில் பறிகொடுத்துக் கதறி அழுத தந்தை… நாமக்கல்லை உலுக்கிய பெருஞ்சோகம்..!!!

Published

on

“என் சின்னப் பிள்ளை நான் இல்லாம தூங்காது சார்…” என்று விபத்தில் தனது மூன்று மகள்களையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்துவிட்டு தந்தை கதறி அழுத சோகச் சம்பவம் நாமக்கல்லில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள சக்கரம்பாளையத்தைச் சேர்ந்த சேகர் – அமுதா தம்பதியரின் மகள்களான சுபிதா, நிவேதா, தனுஸ்ரீ மற்றும் சேகரின் தம்பி ரமேஷ் பாபுவின் மகள் அபிநயா ஆகிய நான்கு பள்ளி மாணவிகளும் ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, தனியார் கல்லூரி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண் குழந்தைகளை விபத்தில் இழந்த சேகரின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகளின் உடல்களைப் பார்த்து ரிப்பன் மாளிகை போலக் கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சங்களை நெகிழச் செய்தது. இந்தத் துயரமான சூழ்நிலையில், தமிழக அரசின் அமைச்சர் அருண்ராஜ் பாதிக்கப்பட்ட தந்தை சேகரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினார். விபத்தில் பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அமைச்சர், அவர்களுக்குத் தகுந்த ஆறுதல் கூறி தேற்றினார்.

Advertisement

இந்தக் கொடூர விபத்து தொடர்பாகப் போலீசார் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாகத் தமிழக அரசு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரே வீட்டில் வளர்ந்த நான்கு பிஞ்சு உயிர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in