LATEST NEWS
“நெருப்புடன் விளையாடாதீங்க” உக்ரைனில் ஆயுத ஆலையா? மிரட்டும் ரஷியா… பதறும் மேற்கத்திய நாடுகள்..!!
மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் மண்ணில் அமைக்கப்படும் எந்தவொரு ஆயுத உற்பத்தி ஆலையும் ரஷிய ஆயுதப் படைகளால் குறிவைத்துத் தாக்கி அழிக்கப்படும் என ரஷியா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. உக்ரைனில் நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கு மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து ரஷியா இந்த மிரட்டலை விடுத்துள்ளது.
உக்ரைன் எல்லBorder-க்குள் அமைக்கப்படும் அத்தகைய ஆயுதத் தொழிற்சாலைகள் அனைத்தும் ரஷிய ராணுவத்தின் முறையான இலக்குகளாக மாறும் என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த மேற்கத்திய நாடுகள் எடுக்கும் இத்தகைய முயற்சிகள், உக்ரைன் நாட்டிற்குத்தான் மேலும் பல சிக்கல்களையும் துயரங்களையும் உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்னொருபுறம், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாகவும், தங்களது இலக்குகளை அடைய அமைதியான முறையில் தீர்வு காண மாஸ்கோ தயாராக இருப்பதாக ரஷியா கூறியுள்ளது. அதே வேளையில், ஜெர்மனியின் லைப்சிக் விமான நிலையத்தைக் குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிக்குப் பின்னால் ரஷியா இருப்பதாக ஜெர்மனி சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பெஸ்கோவ் முற்றிலும் நிராகரித்துள்ளார்.
