LATEST NEWS
இனி கவலையே வேண்டாம்..! சிலிண்டர் ரசீது இல்லைனாலும் இனி புதிய ரேஷன் கார்டு வாங்கலாம் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன் கேஸ் சிலிண்டர் ரசீதை இணைப்பது கட்டாயம் இல்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட அளவில் இ-சேவை மையங்கள் மூலம் பலர் புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்து வரும் நிலையில், சில வட்ட வழங்கல் அலுவலர்கள் சிலிண்டர் ரசீதைக் கட்டாயம் கேட்டு வந்துள்ளனர். கார்டு வாங்கிய பின்னரே சிலிண்டர் இணைப்பு பெற முடியும் என்ற நிலையில், இந்த நடைமுறையால் விண்ணப்பிக்க முடியாமல் தவித்த பொதுமக்கள் அரசிடம் புகார்களை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, உணவுப்பொருள் வழங்கல் துறை துணை கமிஷனர் ராகினி ரவிச்சந்திரன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது கேஸ் சிலிண்டர் ரசீதை இணைக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பித்த 60 நாட்களுக்கு பின்னரே புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையை கட்டாயம் பதிவேற்ற வேண்டும். அதனுடன் முகவரி சான்றிற்காக சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீது அல்லது கேஸ் சிலிண்டர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் இணைத்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
