“என்னது… வயித்துக்குள்ள 14 பேனாவா..? நெஞ்சு வலியால் துடிதுடித்த 33 வயது பெண்… ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னது… வயித்துக்குள்ள 14 பேனாவா..? நெஞ்சு வலியால் துடிதுடித்த 33 வயது பெண்… ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!”

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்திலுள்ள நரசாராவுபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பெட்லூரிவாரிபாலெம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான திருமணமான பெண் ஒருவருக்குக் கடந்த சில நாட்களாகக் கடுமையான நெஞ்சு வலி இருந்துள்ளது. சனிக்கிழமை வலி தாங்க முடியாமல் போகவே, அவரது குடும்பத்தினர் அவரை நரசாராவுபேட்டையில் உள்ள மாதாஸ்ரீ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றுக்குள் பல அசாதாரண பொருட்கள் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மருத்துவக் குழுவினர் உடனடியாகப் பெண்ணிற்கு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்யத் தீர்மானித்தனர். வயிற்றுப் பகுதியில் ஒரு சிறிய துளையிட்டுச் செய்யப்பட்ட இந்தச் சிகிச்சையின் மூலம், அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 14 பேனாக்கள், 5 மரக்கரண்டிகள் மற்றும் 1 மெழுகுவர்த்தி என மொத்தம் 20 பொருட்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இதில் ஒரு பேனாவில் மூடி இல்லாததால், அது வயிற்றின் உட்பகுதியில் குத்தி அவருக்குக் கடுமையான வலியை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது. ஒரே நேரத்தில் ஒரு மனிதர் இவ்வளவு திடப்பொருட்களை விழுங்கியது மிகவும் அரிதானது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இச்சம்பவம் குறித்து அப்பெண்ணின் தந்தை நோமுலா ஹனுமந்த ராவ் கூறுகையில், தனது மகள் கடந்த 10 ஆண்டுகளாகக் கடுமையான மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் இயல்புக்கு மாறாக நடந்துகொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தப் நோய் மற்றும் குடும்பத் தகராறு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். தற்போது அறுவை சிகிச்சைக்குப் பின் அப்பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு உடலளவிலான சிகிச்சையோடு சேர்த்து மனநல மருத்துவர்களின் தீவிர ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in