மக்களே உஷார்..! ரூ.50,000-க்கு மேல பணம் வச்சிருந்தா பறக்கும் படை தூக்கிடும்..! தமிழகத்தில் 2 தொகுதிகளில் திடீரென அமலுக்கு வந்த கெடுபிடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களே உஷார்..! ரூ.50,000-க்கு மேல பணம் வச்சிருந்தா பறக்கும் படை தூக்கிடும்..! தமிழகத்தில் 2 தொகுதிகளில் திடீரென அமலுக்கு வந்த கெடுபிடி உத்தரவு..!!

Published

on

தமிழகத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட அந்த 2 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், பறக்கும்படையினரின் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வெளியே செல்லும்போது ரூ.50,000 வரை மட்டுமே கையில் ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் ரூ.50,000-க்கும் அதிகமான தொகையைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தால், அதற்குரிய முறையான ஆவணங்களைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தகுந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், பறக்கும் படையினரின் சோதனையின் போது அந்தப் பணம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in