LATEST NEWS
செம டுவிஸ்ட்..! அக்கா-தம்பியை அண்ணன்-தம்பி என மாற்றிச் சொன்ன கடத்தல்காரர்… பள்ளி ஊழியர்களின் சாதுரியத்தால் தப்பிய 2 பிஞ்சுக் குழந்தைகள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கோலாரஸ் பகுதியில் உள்ள பத்ரவாஸ் என்ற இடத்தில் இயங்கி வரும் ‘ரைசிங் சோல்ஸ்’ என்ற தனியார் பள்ளியில், இரு சிறு குழந்தைகளைக் கடத்த முயன்ற முயற்சி பள்ளி நிர்வாகத்தின் விழிப்புணர்வால் முறியடிக்கப்பட்டுள்ளது. சிங்காகேடி கிராமத்தைச் சேர்ந்த வேதாான்ஷ் மற்றும் நேமிஷா என்ற இரு குழந்தைகள் அப்பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 8 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் பள்ளிக்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத இளைஞர்கள், அக்குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.
குழந்தைகளின் பெயர்களைச் சரியாகக் கூறிய அந்த இளைஞர்கள், அவர்கள் இருவரையும் “சகோதரர்கள்” (அண்ணன்-தம்பி) என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், பள்ளி ஊழியர்களுக்கு அக்குழந்தைகள் அண்ணன்-தங்கை (சகோதரன் மற்றும் சகோதரி) என்பது தெரிந்திருந்ததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அந்த இளைஞர்களிடம் பெற்றோரிடம் போனில் பேசுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. சுமார் 5 நிமிடங்கள் அழைப்பு பிஸியாக இருப்பதாகக் கூறி சாக்குப்போக்குச் சொன்ன அவ்விளைஞர்கள், சந்தேகம் அடைந்ததை உணர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் யாரையும் குழந்தைகளை அழைத்து வர அனுப்பவில்லை என்பது தெரியவந்தது. உடனடியாக பள்ளிக்கு வந்த பெற்றோர், சிசிடிவி காட்சிகளைப் பார்த்தும் அந்த இளைஞர்களை அடையாளம் காண முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று குழந்தைகளின் தந்தை சிவோந்திர யாதவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெற்றோர் நேரில் வராமல் வேறு யாராவது வந்தால் தொலைபேசியில் உறுதிப்படுத்திய பிறகே குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்ற பள்ளியின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு விதியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
