“எனக்கு சிகிச்சை வேணும்…” அழுதுகொண்டே வெளியேறிய பிளாக் பாண்டி..! கலங்கி நின்ற போட்டியாளர்கள்… பிக்பாஸ் சீசன் 10-ல் நடந்த திடீர் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“எனக்கு சிகிச்சை வேணும்…” அழுதுகொண்டே வெளியேறிய பிளாக் பாண்டி..! கலங்கி நின்ற போட்டியாளர்கள்… பிக்பாஸ் சீசன் 10-ல் நடந்த திடீர் அதிர்ச்சி..!!

Published

on

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி வெறும் இரண்டு நாட்களே ஆன நிலையில், அனைவரும் எதிர்பாராத விதமாகப் போட்டியாளர் பிளாக் பாண்டி அந்நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராகச் சோகத்துடன் வெளியேறியுள்ளார். அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாகத் தொடர் மருத்துவர்களுடனான சிகிச்சை தேவைப்படுவதால், அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவதாகப் பிக்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்தத் திடீர் அறிவிப்பைக் கேட்டு பிளாக் பாண்டி மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுதார். மேலும், அவருடன் இருந்த சக போட்டியாளர்களும் அதிர்ச்சியடைந்து கண்கலங்கியபடி அவருக்கு ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தனர். இது தொடர்பான உணர்ச்சிப்பூர்வமான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in