Uncategorized
“ஐயோ இது என்ன கொடுமை..” அடுத்தடுத்து பற்றி எரிந்த 2 பள்ளிக் கட்டிடங்கள்.. 26 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
கிழக்கு காங்கோ நகரான புகாவுவில் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு பள்ளிகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 26 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரமான சம்பவத்தில் மேலும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரெனப் பற்றிய தீ, கட்டுப்பாடின்றி மளமளவென இரு பள்ளிக் கட்டிடங்களுக்கும் பரவியதால் மாணவர்கள் தப்பி ஓட முடியாமல் நெருப்புப் பிழம்புகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் மீட்புக் குழுவினரும் உள்ளூர் மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணிகளிலும், மாணவர்களை மீட்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரிகள் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவ வீடியோ இணையத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ள்ளது.
