LATEST NEWS
அடப்பாவிங்களா.? சவக்கிடங்கில் ரீல்ஸ்.. தவெக பிரமுகர் உள்பட 3 பேர் அதிரடி கைது. சென்னை ஸ்டான்லியில் பயங்கரம்..!!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த மனித உடல்களுடன் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்ததாக, தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலைப் பார்ப்பதற்காக வியாசர்பாடியைச் சேர்ந்த அவரது நண்பர்களான சதீஷ்குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி வனிதாமலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இவர்கள் இருவரும் அங்கிருந்த பேட்டரி கார் டிரைவர் சங்கர் என்பவரின் உதவியோடு, சவக்கிடங்கு பணியாளர் சீனிவாசனிடம் ரூ.200 லஞ்சம் கொடுத்து சாவியைப் பெற்றுள்ளனர். பின்னர் சவக்கிடப்பை சட்டவிரோதமாகத் திறந்து உள்ளே சென்று, அங்கிருந்த சடலங்களுடன் தங்களது செல்போனில் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துள்ளனர்.
இதையடுத்து சதீஷ்குமார், தினேஷ்குமார், மற்றும் சங்கர் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் கைது செய்யப்பட்ட தினேஷ்குமார் என்பவர் த.வெ.க. கட்சியின் உறுப்பினர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சாவியைக் கொடுத்த சவக்கிடங்கு பணியாளர் சீனிவாசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
