LATEST NEWS
இது தேவையா மேடம் உங்களுக்கு?!.. பாம்பை வச்சு ரீல்ஸ்… அடுத்த செகண்டே அலறித் துடித்த பெண்.. சோஷியல் மீடியாவை அதிர வைக்கும் வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களுக்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த வகையில், பெண் ஒருவர் கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு தன் முகத்திற்கு அருகில் வைத்து ரீல்ஸ் செய்ய முயன்றபோது, அந்தப் பாம்பு எதிர்பாராதவிதமாக அவரது மூக்கில் கடித்தது. இதனால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட, அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாகப் பாம்பை எறிந்துவிட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்தார். இந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பாம்புகள் மற்றும் வனவிலங்குகளுடன் இதுபோன்ற ஆபத்தான ரீல்ஸ்களை உருவாக்குவது உயிருக்கே ஆபத்தாக முடியும். “உயிர் இருந்தால் தான் உலகம்” என்பதை உணர்ந்து, ஆபத்தான உயிரினங்களிடமிருந்து எப்போதும் பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிப்பது அவசியமாகும். உயிரும் பாதுகாப்பும் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் மேலும் பல ரீல்ஸ்களை உருவாக்க முடியும் என்பதால், இதுபோன்ற விபரீத முயற்சிகளைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது
