CINEMA
“நீ சீக்கிரம் ஆக்சிடென்டாகி செத்துடுவ…” புதிய காரை பார்த்து சாபம் விட்ட நபர்.. சோஷியல் மீடியா சைக்கோக்களை வெளுத்து வாங்கிய மதுரை முத்து..!!
விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மதுரை முத்து, சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த வீடியோவில், “இப்போதெல்லாம் சமூகத்தில் நிறைய சைக்கோக்கள் இருக்கிறார்கள், அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள், நானும் பார்த்திருக்கிறேன். நம்முடைய வாழ்க்கையில் பல சைக்கோக்களை நாம் கடந்து கொண்டு தான் வருகிறோம்” என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “சமீபத்தில்கூட நேபாளத்தில் நடந்த சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு பாடம். முந்தைய நாள் ரூ. 65 கோடிக்கு அதிபதியாக இருந்த நபர், அடுத்த நாளிலேயே எதுவும் இல்லாமல் தெருவுக்கு வந்துவிட்டார். உடுக்க உடையக்கூட இல்லாமல் அவர் தவித்ததை நாம் வீடியோவாகப் பார்த்திருப்போம். ஆனால் அந்த ஆபத்தான நேரத்திலும்கூட சில சைக்கோக்களின் செயல் நமக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண்களின் உயிரற்ற உடல் சகதியில் முங்கி கிடக்கும்போது, அவர்களின் காதுகளில் அணிந்திருந்த நகையைத் திருடுவதற்காகச் சிலர் முயன்ற வீடியோக்களையும் பார்த்தோம். நிலை இல்லாத வாழ்க்கை எவ்வளவு பெரிய கோடீஸ்வரனையும் பிச்சைக்காரனாக மாற்றிவிடும் என்று தெரிந்தும், அந்தச் சூழ்நிலையிலும் மனிதாபிமானமே இல்லாமல் திருடுகிறவர்களின் மூளையை என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்களைச் சைக்கோக்கள் என்றே சொல்லலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DdG3eK5PN5i/?utm_source=ig_web_button_share_sheet
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நடக்கும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்துப் பேசிய மதுரை முத்து, “இதேபோல் சில சைக்கோக்களை சமூக வலைத்தளங்களிலும் பார்த்திருப்போம். யார் என்ன பதிவு போட்டாலும் அதற்கு எதிர்மறையாகவே கமெண்ட் போடுவார்கள். சமீபத்தில்கூட நான் புதிய கார் வாங்கியிருக்கிறேன் என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அதற்கு கீழே ஒருவன், ‘நீ விரைவில் ஆக்சிடென்ட் ஆவதற்கு வாழ்த்துகள்’ என்று கமெண்ட் போட்டிருக்கிறான். ஏற்கனவே எனக்குப் பல விபத்துகள் நடந்திருக்கின்றன, ஆனாலும் இன்று நான் மீண்டு வந்திருக்கிறேன். இப்படி இருக்கும்போதும் அடுத்தவர்கள் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைக்கிற இந்த மனநிலையை என்ன சொல்வதென்று தெரியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
