தவெக-வுக்கு ஆதரவு தர முடியாது… விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கம்யூனிஸ்ட்..! பின்னணி என்ன..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தவெக-வுக்கு ஆதரவு தர முடியாது… விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கம்யூனிஸ்ட்..! பின்னணி என்ன..?!

Published

on

இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அக்கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின்போது, பெரும்பாலான கட்சிப் பொறுப்பாளர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றே தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சி மாறுவதற்காகத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் உருவாகியுள்ள இந்த இடைத்தேர்தலில் ஆதரவளிப்பது, எதிர்காலத்தில் தவறான முன்உதாரணமாக மாறிவிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருதுவதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் தவெகவுக்கு ஆதரவு தரக் கூடாது என்பதில் பெரும்பாலான பொறுப்பாளர்கள் உறுதியாக உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in