மகனைப் பறிகொடுத்த தாய்… 22 ஆண்டுகளாக ‘உறைந்திருந்த’ அதிசயம்… 54 வயதில் மீண்டும் மலர்ந்த வாழ்க்கை.. விஞ்ஞான உலகையே வியக்க வைத்த பாசம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகனைப் பறிகொடுத்த தாய்… 22 ஆண்டுகளாக ‘உறைந்திருந்த’ அதிசயம்… 54 வயதில் மீண்டும் மலர்ந்த வாழ்க்கை.. விஞ்ஞான உலகையே வியக்க வைத்த பாசம்..!!

Published

on

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த 54 வயது பெண்மணி கிறிஸ்டினா ரப்தி மற்றும் அவரது 60 வயது கணவர் கான்ஸ்டான்டினோஸ் தம்பதியரின் 21 வயது மகன் கடந்த ஆண்டு ஒரு பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்தார். தங்களது ஒரே மகனை இழந்து சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்த இந்தத் தம்பதியினர், தங்கள் வாரிசை மீண்டும் பெற ஒரு அதிரடி முடிவை எடுத்தனர்.

இதற்காக அவர்கள், சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு (2004-ல்) தங்களது சொந்த கருமுட்டை மற்றும் உயிரணுவைக் கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கி, உறைநிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கருவைப் பயன்படுத்த முடிவு செய்தனர். நவீன செயற்கை கருத்தரித்தல் (IVF) தொழில்நுட்பத்தின் மூலம் இந்த உறைநிலை கருவை கிறிஸ்டினாவின் கருப்பையில் செலுத்த மருத்துவர்கள் திட்டமிட்டனர். கிரீஸ் நாட்டு சட்டப்படி 54 வயது வரை மட்டுமே பெண்கள் இச்சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்பதால், கிறிஸ்டினாவுக்கு வெறும் 2 மாத கால அவகாசமே எஞ்சியிருந்தது.

Advertisement

அரசின் கடுமையான விதிமுறைகள் மற்றும் வயது முதிர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களைக் கடந்து, மருத்துவர்களின் தீவிர முயற்சியால் கிறிஸ்டினா வெற்றிகரமாக கர்ப்பமடைந்தார். தற்போது அவருக்கு 3½ கிலோ எடையில் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது மறைந்த மகனான ஜார்ஜஸின் நினைவாக, அந்தப் பெண் குழந்தைக்கு ‘ஜார்ஜியா’ என்று நெகிழ்ச்சியுடன் பெயரிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in