LATEST NEWS
ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா..? வாங்கிய காசுக்காக இவ்வளவு பச்சையாவா குரைப்பது..? தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட திமுக ஐடி விங்..!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பிரச்சினை தொடர்பாகத் தமிழக அரசை மடைமாற்றம் செய்ய முயலும் தவெக அரசுக்கு, திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தையும் விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளது. கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் கிளாம்பாக்கத்தில் பொதுமக்கள் கடுமையாகக் கதறித் துடித்ததாகக் குறிப்பிட்டுள்ள திமுக, அங்குப் போதிய அரசுப் பேருந்துகள் இல்லாததால் ஆம்னி பேருந்துகளில் 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பகல் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மக்களின் இந்த நியாயமான துயரத்தைத் தீர்க்கத் துப்பில்லாத தமிழக அரசு, இதனை மறைப்பதற்காக “இது திமுக சதி” என்று திட்டமிட்டு மடைமாற்ற முயல்வதாக திமுக ஐடி விங் சாடியுள்ளது. இதற்காகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு சமூக ஊடகங்களில் பேசும் சில இன்ஸ்டாகிராம் கோமாளிகளை, விடுமுறை முடியும் ‘ஞாயிற்றுக்கிழமை’ இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குத் தவெக அரசு அனுப்பி வைத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அங்குச் சென்ற அந்தச் சமூக ஊடக நபர்கள், “பேருந்து நிலையத்தில் கூட்டமே இல்லை, பஸ்கள் அனைத்தும் ஃப்ரீயாக இருக்கின்றன” என்று ரீல்ஸ் வீடியோக்களைப் போட்டுப் பொய்ப் பரப்புரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக விடுமுறை முடிந்து திரும்பும் நாளுக்கு முந்தைய ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா என்றும், வாங்கிய காசுக்காக இவ்வளவு பச்சையாகவா குறைத்துக் குரைத்து மாட்டுவது என்றும் திமுக ஐடி விங் தனது காரசாரமான பதிவில் கேள்வி எழுப்பியுள்ளது.
