LATEST NEWS
FLASH: தவெகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளி.. அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..!!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் குண்டடம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைந்துள்ளார். சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பன்னீர்செல்வம் இந்த முடிவை எடுத்துள்ளார். அவருடன் தவெகவின் குண்டடம் துணை ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட முக்கிய உள்ளூர் நிர்வாகிகளும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டாக மாற்றுக்கட்சிக்குச் சென்றிருப்பது அக்கட்சிக்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தொகுதிக்குள் தவெகவின் வாக்கு வங்கியை நிலைநிறுத்த அக்கட்சித் தலைமை முயன்று வரும் சூழலில், இந்த திடீர் கட்சித் தாவல் தாராபுரம் தொகுதி தேர்தல் களத்தில் அதிமுகவிற்கான சாதகமான சூழலை வலுப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
