“என் சொத்து அவங்களுக்கும் தான்” விந்தணு தானக் குழந்தைகளுக்கு 20 பில்லியன் டாலரை வாரி வழங்கும் டெலிகிராம் நிறுவனர்… பாஸ் பாவெல் துரோவின் மாஸ் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் சொத்து அவங்களுக்கும் தான்” விந்தணு தானக் குழந்தைகளுக்கு 20 பில்லியன் டாலரை வாரி வழங்கும் டெலிகிராம் நிறுவனர்… பாஸ் பாவெல் துரோவின் மாஸ் அறிவிப்பு..!!

Published

on

டெலிகிராம் செயலியின் நிறுவனரான பாவெல் துரோவ் , தனது 20 பில்லியன் டாலர் (சுமார் ₹1.6 லட்சம் கோடி) சொத்துகளைத் தனது விந்தணு தானம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கப் போவதாக அறிவித்த பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவருக்குப் பல்வேறு திருமணங்கள் மற்றும் உறவுகள் மூலம் 3 மனைவிகள் இருப்பதாகவும், அவர்கள் மூலமாக 6 குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, கடந்த பல வருடங்களாக அவர் செய்த விந்தணு தானம் மூலமாக உலகளவில் தற்போது 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர் பயாலஜிக்கல் தந்தையாக இருக்கிறார்.

தற்போது வைரலாகி வரும் தகவலின்படி, விந்தணு தானம் மூலம் பிறந்த இந்த 100 குழந்தைகளுக்கும் பாவெல் துரோவின் பில்லியன் டாலர் சொத்தில் சம பங்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த சொத்துக்கள் அவர்களுக்கு உடனடியாகக் கிடைத்துவிடாது; விந்தணு தானம் மூலம் பிறந்த குழந்தைகள் தங்களது 30 வயதைக் கடந்த பிறகுதான், பாவெல் துரோவின் இந்த பிரம்மாண்ட சொத்துக்கள் அவர்களைச் சென்றடையும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர் ஒருவரின் இந்த விசித்திரமான மற்றும் தாராளமான அறிவிப்பு இணையவாசிகளிடையே வியப்பையும் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in