CRIME
“தாய்க்குச் சமமான தாய்மாமனா இவன்?” 5 வயதுப் பிஞ்சு குழந்தையை வேட்டையாடிய கொடூர பாவி.. தர்மஅடி கொடுத்துத் தூக்கிய பொதுமக்கள்..!!
தெலங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிஃபாபாத் மாவட்டம் ககாஸ்நகரில், 5 வயது சிறுமி ஒருவர் அவரது சொந்த மாமாவாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது. ரத்த பாசத்தையும் மறந்து 5 வயதுக் குழந்தையிடம் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், அந்த நபரைக் கையாங்காலுமாகப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துத் தர்மஅடி கொடுத்துள்ளனர். மக்கள் கூட்டத்திடம் சிக்கிய அந்த நபரால் அப்பகுதியில் பெரும் சலசலப்பும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் சூழலும் உருவானது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டுத் தங்களது Custody-க்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், சிறுமியின் மருத்துவப் பரிசோதனை மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
