LATEST NEWS
BREAKING: வேட்பாளர்களை அறிவித்த இடதுசாரிகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தங்களது வேட்பாளர்களை இடதுசாரி கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக லட்சுமணனும் களம் இறக்கப்பட்டுள்ளனர். தவெக அரசுக்கு இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையிலும், இந்த இடைத்தேர்தலில் அவர்கள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்துள்ளது.
இடதுசாரிகளின் இந்தத் தனித்தப் போட்டி முடிவின் காரணமாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் களம் தற்போது ஐந்துமுனைப் போட்டியாக மாறியுள்ளது. ஆளுங்கட்சியான தவெக, முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் நேரடியாகப் போட்டியிடுவதால், இந்தத் தேர்தல் களம் தற்போதே பெரும் அரசியல் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
