CRIME
அய்யோ கொடுமையே… ஐபோனுக்காக பாட்டியை அலற அலற அடித்த பேரன்…! நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் பேரனொருவன் தன் பாட்டி மற்றும் அத்தையைத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புலந்த்சஹர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகலிம்பூரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. தனது பாட்டி மற்றும் அத்தையிடம் விலையுயர்ந்த ஐபோன் மற்றும் ரூ.3 லட்சம் பணம் தருமாறு அந்த இளைஞன் கேட்டுள்ளான். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அவன் இருவரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளான். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட முதிய பாட்டி கண்ணீருடன் இது குறித்துக் கூறுகையில், குடும்பத்தினர் சமீபத்தில்தான் அவனுக்கு ஒரு புதிய பைக் வாங்கித் தந்ததாகவும், அதன்ப பிறகும் அவன் திருப்தியடையாமல் ஐபோன் மற்றும் ரூ.3 லட்சம் கேட்டு வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். அவனது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், கோபமடைந்த அவன் இருவரையும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளான். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கி, பேரனின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
https://www.instagram.com/reel/DdWGUWTJNnn/?utm_source=ig_web_button_share_sheet
இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது குறித்து புலந்த்சஹர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரகர் பாண்டே கூறுகையில், தாக்குதல் தொடர்பான வீடியோ வெளிவந்துள்ளதாகவும், இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணையில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
