“என் மனைவியை விட்ருங்க…” பெண்ணின் தலைமுடியைப் பிடித்துமிருகத்தனமாக இழுத்துச் சென்ற போலீஸ்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் மனைவியை விட்ருங்க…” பெண்ணின் தலைமுடியைப் பிடித்துமிருகத்தனமாக இழுத்துச் சென்ற போலீஸ்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!

Published

on

ஹைதராபாத்தில் உள்ள ஹபீஸ்பேட் ரயில் நிலையப் பகுதியில் கடை ஒன்றின் அருகே நின்றுகொண்டிருந்த பெண்ணை, ரயில்வே போலீஸ் காவலர் ஒருவர் இரக்கமின்றித் தாக்கி, அவரது முடியைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற அநாகரிகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமில்லாமல், அவரது தலைமுடியைப் பிடித்துக்கொண்டு ரயில் நிலையத்தை நோக்கி அந்தப் போலீஸ் காவலர் இழுத்துச் சென்றுள்ளார். இதைப் பார்த்துப் பதறிய அவரது கணவர், தனது மனைவியை விட்டுவிடுமாறு எவ்வளவோ கெஞ்சியும், அந்தப் போலீஸ் காவலர் எவ்வித இரக்கமும் காட்டாமல் பேய் அரக்கனைப் போலக் கொடூரமாக நடந்துகொண்டார்.

இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. போலீஸ் சீருடையில் இருந்துகொண்டு ஒரு பெண்ணிடம் இப்படி மிருகத்தனமாக நடந்துகொண்ட அந்த ரயில்வே போலீஸ் காவலரின் நடத்தைக்கு இணையத்தில் கடுமையான எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக உயர் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in