CINEMA
அடிதூள்..! 24 மணி நேர கார் பந்தயத்தில் 2-ஆவது இடம்பிடித்து அஜித் குமார் அணி அசத்தல்… கொண்டாடும் ரசிகர்கள்..!!
ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற புகழ்பெற்ற 24 மணி நேர சர்வதேச கார் பந்தயத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் ‘அஜித் குமார் ரேசிங்’ அணி மிகச்சிறந்த சாதனையைப் படைத்துள்ளது. பெல்ஜியத்தின் ரெட்ஆண்ட் ரேசிங் அணியுடன் கூட்டணி அமைத்துப் பங்கேற்ற இந்தத் தொடரில், அஜித் குமாரின் குழுவினர் GT3 Pro-Am பிரிவில் 2-ஆவது இடத்தை எட்டி அசத்தியுள்ளனர். மேலும், உலக அளவிலான இந்தப் போட்டியின் ஒட்டுமொத்த தரவரிசையில் இவர்களது அணி 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தொடர்ந்து 24 மணி நேரமும் இடைவிடாமல் காரைச் செலுத்தி அதிக தூரத்தைக் கடக்க வேண்டிய இந்த சவாலான பந்தயத்தில், மாபெரும் வெற்றியைப் பெற்ற பின்னர் நடிகர் அஜித் குமார் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தித் தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினார். கடந்த ஆண்டு அறிமுகமானது முதல், துபாய் ஆட்டோட்ரோம், இத்தாலியின் முஜெல்லோ, பெல்ஜியத்தின் சர்க்யூட் டி ஸ்பா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பந்தயக் களங்களில் அஜித்தின் அணி தொடர்ந்து குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் அனுபவங்களையும் பெற்று வருகிறது.
