என்ன இது கொடுமை… பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டு… அதே துப்பாக்கியால் தன் தலையில் சுட்டுக்கொண்ட வாலிபர்.. சில்ட்ரன் அகாடமியில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

என்ன இது கொடுமை… பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டு… அதே துப்பாக்கியால் தன் தலையில் சுட்டுக்கொண்ட வாலிபர்.. சில்ட்ரன் அகாடமியில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு பள்ளியில் பட்டப்பகலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரத்தின் ஷாபுரா கோத்தி பகுதியில் அமைந்துள்ள சில்ட்ரன் அகாடமி பள்ளியில் திங்கள்கிழமை காலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. பள்ளிக் வளாகத்திற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த பெண் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர், அதே துப்பாக்கியால் தனது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரண்டு உடல்களையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, பலியான பெண் ஆசிரியர் 26 வயதான நிஷாத் பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 28 வயதான சவுத் அன்சாரி என்பது தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை காலை சவுத் அன்சாரி, பள்ளிக்குச் சென்று நிஷாத் பாத்திமாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், சவுத் அன்சாரி திடீரெனத் தனது கைத்துப்பாக்கியை (நாட்டுத் துப்பாக்கி) எடுத்து நிஷாத் பாத்திமாவைச் சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, அந்த நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

Advertisement

பள்ளியில் வகுப்புகள் வழக்கம்போல் நடந்துகொண்டிருந்த வேளையில், திடீரெனக் கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் பீதி ஏற்பட்டது. பயந்துபோன குழந்தைகள் வகுப்பறைக்குள் அடைக்கலம் புகுந்தனர். உடனடியாகச் செயல்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களைப் பாதுகாத்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் அதிகாரிகள், தடயவியல் குழுவினர் தடயங்களைச் சேகரித்தனர். மேலும், பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in