LATEST NEWS
அடிப்பாவி… சாப்பிட்ட கொஞ்ச நேரத்துல சுருண்டு விழுந்த குடும்பம்..! பின்னணியில் மருமகள் செய்த பகீர் செயல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பஜேதா கிராமத்தில், உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்நிலை திடீரென மோசமடைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ராம்தேவி (35), சுனிதா (35), நேஹா (15) மற்றும் குஷி (22) ஆகிய நால்வருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சானி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அனைவரும் ஹமீர்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் குடும்பத்தின் மருமகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலையில் குடும்பத்தினரின் உடல்நிலை மோசமடைந்த விஷயம் தெரியவந்ததும், அச்சத்தின் காரணமாக அந்த மருமகளும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருமகள் மாத்திரை சாப்பிட்டது தொடர்பான உண்மையையும் காவல்துறை விசாரித்து வருகிறது.
தகவல் அறிந்த லால்புரா காவல் நிலைய அதிகாரி சூர்ய குமார் ஷாஹி தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். குடும்பத்தினர் இரவில் என்ன உணவு சாப்பிட்டார்கள், அதில் மருந்து அல்லது மாத்திரைகள் எவ்வாறு கலக்கப்பட்டன, அந்த மாத்திரைகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு ஏதேனும் காரணமா என்றும் கோட்டாட்சியர் யஷ்பால் சிங் மேற்பார்வையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
