“குப்பையில கிடைச்சது சார்..!” நள்ளிரவுல பங்கு போடப்போய் மாட்டுன 5 பேர்.. ரோந்து போன போலீஸை மிரள வச்ச 3.8 கிலோ தங்கக்கட்டிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குப்பையில கிடைச்சது சார்..!” நள்ளிரவுல பங்கு போடப்போய் மாட்டுன 5 பேர்.. ரோந்து போன போலீஸை மிரள வச்ச 3.8 கிலோ தங்கக்கட்டிகள்..!!

Published

on

ராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சாலையில் சிலர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்களிடம் 3.8 கிலோ தங்கக்கட்டிகள், 227 கிராம் நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது, அந்த தங்கக்கட்டிகளும் பணமும் குப்பையில் இருந்துதான் தங்களுக்குக் கிடைத்தன என்று அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து அவர்களிடம் இருந்த தங்கக்கட்டிகள், நகைகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். எனினும், சண்டையிட்டுக் கொண்டிருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்யவில்லை. தங்கக் கடத்தல் எதுவும் நடைபெற்று அது வெளியில் தெரியாமல் இருக்க குப்பையில் வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in