ஒரே நொடி தான் எல்லாம் போச்சு..! அதிவேக டிரெய்லர் – பிக்அப் வண்டி நேருக்கு நேர் மோதி நொறுங்கிய கொடூர விபத்து.. சிசிடிவி காட்சிகளால் அதிரும் சமூக வலைதளம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே நொடி தான் எல்லாம் போச்சு..! அதிவேக டிரெய்லர் – பிக்அப் வண்டி நேருக்கு நேர் மோதி நொறுங்கிய கொடூர விபத்து.. சிசிடிவி காட்சிகளால் அதிரும் சமூக வலைதளம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கிசான் நகர் – பித்னு சாலையில், அதிவேகமாக வந்த டிரெய்லர் லாரியும் பிக்அப் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் இரண்டு ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சசேந்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீதி இதாரா என்ற இடத்திற்கு அருகே வியாழக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

அதிவேகமாக வந்த டிரெய்லர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, எதிரே குளிர்பான பாட்டில்களை ஏற்றி வந்த பிக்அப் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த மோதலின் தாக்கம் எவ்வளவு பலமாக இருந்தது என்றால், இரண்டு வாகனங்களின் முன்பகுதியும் முற்றிலும் நொறுங்கியதோடு, பிக்அப் வாகனத்தில் இருந்த குளிர்பான பாட்டில்கள் அனைத்தும் சாலை முழுவதும் சிதறிக்கிடந்தன. இந்த விபத்தில் டிரெய்லரை ஓட்டி வந்த ஔரையா பகுதியைச் சேர்ந்த நீரஜ் குமார் (40) மற்றும் பிக்அப் வாகனத்தை ஓட்டி வந்த ராய்பூர் பகுதியைச் சேர்ந்த குல்தீப் குமார் (40) ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

விபத்து குறித்து தகவலறிந்த சசேந்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான வாகனங்கள் ஜேசிபி எந்திரம் மூலம் சாலையிலிருந்து அகற்றப்பட்டன. இந்த மீட்புப் பணிகளால் கிசான் நகர் – பித்னு சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in