CINEMA
என்னோட அந்தரங்க வீடீயோவை டிரைவர், வாட்ச்மேன் பாத்துட்டாங்க.. பயத்துல 3 நாள் வீட்டை விட்டு வெளியே வரல.. உண்மையை உடைத்த நடிகை ராதிகா ஆப்தே..!!
பாலிவுட் சினிமாவில் போல்டான வேடங்களில் நடித்து முத்திரை பதித்து வரும் நடிகை ராதிகா ஆப்தே, தான் நடித்த படத்தின் படுக்கையறை காட்சி இணையத்தில் கசிந்தபோது சந்தித்த மன உளைச்சல்கள் மற்றும் மோசமான அனுபவங்கள் குறித்து ஓபனாகப் பேசியுள்ளார். அந்த நெருக்கமான அந்தரங்க வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவியதால், ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக சுமார் நான்கு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்நேரத்தில் அவரது மேக்கப் கலைஞர், தனது கார் ஓட்டுநர் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு ‘நீ ராதிகா ஆப்தே வீட்டிற்குத்தான் செல்கிறாயா?’ என்று கேட்டதாகக் கூறியபோது ராதிகா பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதுமட்டுமன்றி, தனது வீட்டு காவலாளியும் அந்த வீடியோவைப் பார்த்திருந்ததை அறிந்த அவர், சமூகத்தில் தமக்கான பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்து, அதை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டதாக எமோஷனலாகப் பகிர்ந்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையின் இறுதியாக, அவர் தனது கார் ஓட்டுநர் மற்றும் தனிப்பட்ட உதவியாளரை நேரில் அழைத்து, “என் வீடியோ ஒன்று கசிந்துள்ளது. நீங்கள் பார்க்கவில்லை என்றால் நானே அனுப்புகிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்” என்று தைரியமாகக் கூறியுள்ளார். மேலும், இதனைப் பார்த்த பிறகும் தனக்கு சம்மதம் என்றால் தொடர்ந்து வேலை செய்யுமாறும், இல்லையெனில் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பலாம் என்றும் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், நாங்கள் எப்போதும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று கூறி தனக்கு அரணாக நின்றதாக ராதிகா ஆப்தே நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
