CRIME
“என் பிள்ளையை தள்ளிவிட்டு கொன்னுட்டான்” கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த பெண்… நள்ளிரவில் நடந்த அந்த சம்பவம்… கதறி அழும் பெண் வீட்டார்…!!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் மாயமான பிரியங்கா என்ற புதுப்பெண், ஹேமாவதி கால்வாயில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சிக்கநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் பிரியங்காவிற்கும் சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 19-ம் தேதி இரவு கணவன்-மனைவி இருவரும் அருகில் உள்ள ஹேமாவதி கால்வாய் பகுதிக்குச் சென்றபோது, பிரியங்கா திடீரென கணவரின் கண் எதிரிலேயே கால்வாயில் குதித்து மாயமானதாகக் கூறப்பட்டது.
கால்வாயில் அதிக நீர்வரத்து இருந்ததால் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் உடனே பிரியங்காவை கண்டறிய முடியவில்லை. இதனிடையே, பிரியங்காவை அவரது கணவர் ராஜசேகர் திட்டமிட்டுக் கொலை செய்து கால்வாயில் தள்ளியதாகப் பெற்றோர் குற்றம் சாட்டினர். மறுபுறம், பிரியங்காவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்துவிட்டதாகக் கூறி ராஜசேகரின் பெற்றோர் அக்குற்றச்சாட்டை மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கால்வாயில் நீர்வரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, சரவணபெலகோலா அருகே செப்டம்பர் 26 அன்று பிரியங்காவின் உடல் மிதந்து மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டதுடன், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
