அய்யோ கொடுமை.! ON-இல் இருந்த மெயின் சுவிட்ச்… வாட்டர் டேங்க் தண்ணீரில் பாய்ந்த கரண்ட்…மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் பரிதாப மரணம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமை.! ON-இல் இருந்த மெயின் சுவிட்ச்… வாட்டர் டேங்க் தண்ணீரில் பாய்ந்த கரண்ட்…மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் பரிதாப மரணம்..!!

Published

on

நெலூர் மாவட்டம் ஹரிநாதபுரத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான விபத்தில், மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த வாட்டர் டேங்க் நிரம்பி, அதிலிருந்து தண்ணீர் தரை முழுவதும் வழிந்து ஓடியுள்ளது. அந்தச் சமயம் வீட்டின் மெயின் போர்டு சுவிட்ச் அணைக்கப்படாமல் ஆன் நிலையிலேயே இருந்ததால், தரை முழுவதும் தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிர்க்கொல்லியாக மாறியுள்ளது.

இந்த எதிர்பாராத மின் கசிவின் காரணமாக, அந்த வீட்டில் இருந்த ஜோதி உரிலகண்டி (11), அமுல்யா (7) ஆகிய இரு சகோதரிகள் மீது மின்சாரம் பயங்கரமாகத் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர், உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்களையும் உடற்கூறாய்வுக்காக நெலூர் ஜிஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in