LATEST NEWS
“அம்மா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” விமர்சனங்களை ஓரம்கட்டிய விஜய்.. திமுக முன்னாள் அமைச்சரின் தாயார் காலில் விழுந்து ஆசி… செம சம்பவம்..!!
தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தரிசனத்திற்காக வருகை தந்தபோது, திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாரும் கோயில் அறங்காவலருமான ருக்மணி பழனிவேல் ராஜன் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். கோயிலுக்கு வந்த முதலமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தி ருக்மணி வரவேற்ற நிலையில், அவரது கரங்களைப் பிடித்து நலம் விசாரித்த விஜய், பின்னர் திடீரென அவரது காலில் விழுந்து வணங்கியது அங்கிருந்தோரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் தங்களது பெயர் புறக்கணிக்கப்பட்டதை தாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், தவெக அரசு நடத்தி வரும் இக்கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதாக அவர் பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டிருந்தார். குறிப்பாகப் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் அனுமதி அட்டைகள் விநியோகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக அவர் தவெக அரசு மீது அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
அரசு மீது அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையிலும், அரசியல் பாகுபாடின்றி முதலமைச்சர் விஜய் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். தவெக அரசின் மீதான விமர்சனங்களுக்கு மத்தியில், முதலமைச்சரின் இந்த அடக்கமான மற்றும் முதிர்ச்சியான அணுகுமுறை தமிழக அரசியல் வட்டாரத்திலும், ஆன்மீகப் பெரியோர்களிடையேயும் தற்பொழுது மிக உற்றுநோக்கப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது.
