LATEST NEWS
“ஆளுங்கட்சிக்கு போடுற ஓட்டு மட்டும்தான் ‘நல்ல ஓட்டு’.. அவங்களுக்கு போடுற ஓட்டு கூட்டுச்சதிக்கு சமம்..!” மேடையில் ஆவேசமான தவெக N. ஆனந்த்..!!
அமைச்சர் N. ஆனந்த தாராபுரத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போது, ஆளுங்கட்சிக்கு அளிக்கப்படும் ஓட்டு மட்டுமே உண்மையிலேயே நல்ல ஓட்டு என்று உரக்கத் தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்குப் போடும் ஓட்டுகள் அனைத்தும் தில்லுமுல்லு மற்றும் கூட்டுச்சதிக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்று அவர் கடுமையாகச் சாடினார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளுடைய காலகட்டத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் எங்கே போயின எனத் தேடும் அவல நிலை கண்டிப்பாக வரும் என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், தவெக வேட்பாளரை ஒரு பெண் என்றும் பாராமல் எதிர்க்கட்சிகள் தங்களின் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி வருவதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். எதிர்க்கட்சிகளின் இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுக்களை மிகக் காரசாரமாகச் சாடிய அவர், மக்களின் ஆதரவோடு இந்த அநியாயங்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
