பகீர்.. காதலிக்க மறுத்த நர்ஸ் துண்டு துண்டாக வெட்டி கொலை.. தப்பி ஓடிய கொலையாளி தண்டவாளத்தில் பிணமாக மீட்பு.. ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்.. காதலிக்க மறுத்த நர்ஸ் துண்டு துண்டாக வெட்டி கொலை.. தப்பி ஓடிய கொலையாளி தண்டவாளத்தில் பிணமாக மீட்பு.. ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்..!!

Published

on

புதுச்சேரியில் நர்சை வெட்டி கொன்ற ரவுடியின் உடல் காட்பாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் மீட்கப்பட்டுள்ளதோடு, செல்போன், பைக் கொடுத்து உதவிய ரவுடியின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி வில்லியனூர் கோபாலன் கடை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவரது மகள் ஜெயஸ்ரீ (22). தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கலைக்குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கலைக்குமார் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்ததால், அவருடன் பேசுவதை ஜெயஸ்ரீ நிறுத்தி விட்டார். சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகும் ஜெயஸ்ரீ அவரை சந்திப்பதையும், பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் கலைக்குமார், ஜெயஸ்ரீயின் நடவடிக்கைகளை கண்காணித்தபோது, அவர் வேறொரு நபருடன் பழகி வந்ததை அறிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைக்குமார், தன்னிடம் பேசாமல் உள்ள ஜெயஸ்ரீயை தனது இரண்டு நண்பர்கள் உதவியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெட்டி படுகொலை செய்தார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கலைக்குமாரின் நண்பன் லோகேஷ் என்பவரை முதலில் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கலைக்குமார் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், திருப்பதியில் வைத்து கார்த்திக் என்பவரை பிடித்தனர். ஜெயஸ்ரீயுடன் பேசுவதற்காக செல்போன் கொடுத்தது மற்றும் ஜெயஸ்ரீயை சந்திக்க தனது பைக்கை கொடுத்து உதவியது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

இதனிடையே காட்பாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் ரவுடி கலைக்குமார் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை புதுச்சேரி கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in