CRIME
அய்யயோ.. சிறுவன் மீது மோதிவிட்டு பறந்த ஸ்கார்பியோ… சினிமா பாணியில் துரத்தி மடக்கிய போலீஸ்.. அடுத்த நொடியே மக்கள் செய்த காரியத்தை பாருங்க.. வைரலாகும் ஆக்ரோஷ வீடியோ..!!
அசாம் மாநிலம் நகோன் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 36-ல், அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், சிறுவன் அடிபட்டு விழுந்ததைக்கூடப் பொருட்படுத்தாமல் கதியதோலி நோக்கி அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்துத் தகவலறிந்த போலீஸார் காரை சினிமா பாணியில் துரத்திச் சென்று நோனோய் என்ற இடத்தில் மடக்கிப் பிடித்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கார் ஓட்டுநரின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த உள்ளூர் பொதுமக்கள், நோனோய் பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்ட அந்த ஸ்கார்பியோ காரை ஒட்டுமொத்தமாகச் சூழ்ந்து கொண்டு அடித்து நொறுக்கி தங்களது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்; இதனால் அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இந்தச் விபத்து மற்றும் தப்பியோட்டம் தொடர்பாகப் போலீஸார் உடனடியாகச் செயல்பட்டு காரில் இருந்த இரண்டு பேரை அதிரடியாகக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், நொறுக்கப்பட்ட காரைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
